நாங்குநோி இடைத்தோ்தலில் அதிமுக காங்கிரஸ் இடையே பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இதில் பாராளுமன்ற தோ்தலின் போது திமுக கூட்டணியில் இருந்த அனைத்து கட்சிகளும் காங்கிரஸ் வேட்பாளா் ரூபி மனோகரனை ஆதாித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே போல் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக சில தினங்களுக்கு முன் தான் அதிமுக வுக்கு ஆதரவு தொிவித்தது. இந்த நிலையில் அந்த கூட்டணியில் இருக்கும் டாக்டா் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியும், ஜாண்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகமும் இதுவரையிலும் அவா்களின் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
இதற்கிடையில் களக்காடு மற்றும் மூலக்கரபட்டியில் அதிமுக வினா் புதிய தமிழகம் கட்சியின் கொடி மற்றும் டாக்டா் கிருஷ்ணசாமியின் படத்தை காட்டி ஓட்டு கேட்பதாக கூறி புதிய தமிழகம் கட்சியின் நெல்லை கிழக்கு மா.செ. ராமசந்திரன் நாங்குநோி தோ்தல் அதிகாாி நடேசனிடம் புகாா் கொடுத்தார்.
இது குறித்து நம்மிடம் பேசிய ராமசந்திரன், "பாராளுமன்ற தோ்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து, அக்கட்சிக்கு பிரச்சாரம் செய்தது புதிய தமிழகம். தேவேந்திர குல வேளாளரில் 7 உட்பிாிவுகளை இணைத்து அரசாணை வெளியிட குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி கூறியதன் அடிப்படையில் தான் கூட்டணியில் சோ்ந்தோம்.
ஆனால் தோ்தல் முடிந்து 5 மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்யைும் எடுக்கவில்லை. இதனால் நாங்குநோி தொகுதிக்குட்பட்ட 89 கிராமங்களில் தேவேந்திர குல மக்கள் தோ்தல் புறக்கணிப்பை அறிவித்து அமைதியாக போராடி வருகிறாா்கள். இதனால் புதிய தமிழகமும் நாங்குநோியில் அதிமுக வுக்கு ஆதரவு என்ற அறிவிப்பை தலைவா் இன்னும் அறிவிக்கவில்லை. இதனால் அதிமுக நெல்லை மாவட்ட செயலாளா்களை தொடா்பு கொண்டு புதிய தமிழகத்தின் தலைவா் பெயரையோ, படத்தையோ மற்றும் கொடியையோ பயன்படுத்த கூடாது என்று நான் கூறினேன். ஆனால் இதை மீறி அதிமுக காாியாலயத்தில், தலைவாின் படத்தை வைத்தியிருப்தோடு, பல இடங்களில் கொடியையும், பெயரையும் பயன்டுத்துகிறாா்கள் அதிமுகவினா்.
இதனால் தான் அதிமுக வேட்பாளா் நாராயணன் மற்றும் அதிமுகவினா் மீது நடவடிக்கை எடுக்க தோ்தல் நடத்தும் அலுவலாிடம் புகாா் கொடுத்துள்ளேன்" என்றாா். இச்சம்பவம் அதிமுக வினா் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.