Skip to main content

வாடகை தாய் விவகாரம்... சிஎஃப்சி மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு

Published on 16/10/2022 | Edited on 16/10/2022

 

The matter of surrogate mothers being accommodated... Officials in a private hospital investigated

 

சென்னை சூளைமேட்டில் உள்ள சிஎஃப்சி மருத்துவமனையில் வாடகை தாய்மார்கள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட  இடத்தில் மூன்று பேர் கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

 

சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் கருத்தரிப்பு மையமாக செயல்பட்டு வரும் சிஎஃப்சி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த மருத்துவமனையில் வாடகை தாய்மார்கள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பதாக நேற்று செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் அந்த தகவல் பொய்யானது என அங்குள்ள கர்ப்பிணி பெண்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தனர். இது குறித்து விசாரிக்க மூன்று அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

 

இந்நிலையில் குறிப்பிட்ட மருத்துவமனையில் ஆய்வு செய்வதற்காக 3 அதிகாரிகள் வருகை புரிந்தனர். அப்பொழுது 15க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் தங்க வைக்கப்பட்டுள்ள வீட்டில் ஆய்வு செய்தபொழுது அங்கு தங்கி இருந்தவர்கள் பிரசாந்த் பெர்டிலிட்டி சென்டர் என சொல்லக்கூடிய தனியார் மருத்துவமனையின் சார்பில் தங்க வைக்கப்பட்டுள்ள கர்ப்பிணி தாய்மார்கள் என அங்கு இருந்தவர்கள் ஒப்புக் கொண்டனர். சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் நிர்வாகத்தின் தரப்பிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டனர். நாளை இதுகுறித்து விரிவான அறிக்கையை மூன்று அதிகாரிகளும் சுகாதாரத்துறைக்கு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்