Skip to main content

இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மலேசியா அமைச்சர் தமிழகம் வருகை! 

Published on 24/06/2022 | Edited on 24/06/2022

 

Malaysian Minister visits Tamil Nadu to attend literary events

 

மலேசியா மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரவணன், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடக்கும் இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் உணவகத்தில் இன்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது அவர், “திருச்சி, ராமேஸ்வரம், கோவை போன்ற நகரங்களில் உள்ள இலக்கியம் சார்ந்த அமைப்புகள் எங்களை அழைத்துள்ளனர். இந்த பயணத்தை பொறுத்தவரை மலேசியாவிற்கும் தமிழகத்திற்கும் உள்ள இலக்கிய உறவை வலுப்படுத்துவதே. மலேசியாவில் வேலைவாய்ப்பின்மை கரோனோவின் போது 5.3% ஆக இருந்தது. தற்போது 4% ஆக குறைந்துள்ளது. இதற்கு காரணம் அரசு எடுத்த நடவடிக்கைகள் தான். 

 

மலேசியாவில் 6 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழகம் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். தமிழகத்தில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்துவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை எடுத்து வருகிறது. உணவகங்கள் மற்றும் தொழிலாளர் துறை உள்ளிட்ட துறைகளில் தற்போது வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது” என தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்