Skip to main content

டெல்லி தேர்தல் முடிவுகள்; பாஜக - ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி!

Published on 08/02/2025 | Edited on 08/02/2025

 

Delhi Election Results Tough competition between BJP and AAP

70 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த 5ஆம் தேதி (05.02.2025) ஒரே கட்டமாக நடைபெற்றது. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள், இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டன. இதனால் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க என மும்முனை போட்டி நிலவியது. இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (08.02.2025) காலை 8 மணி முதல்  எண்ணப்பட்டு வருகின்றன.

இதில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே தொடர்ந்து கடும் போட்டி நிலவி வருகிறது. அதன்படி காலை 10.45 மணி நிலவரப்படி பாஜக 42 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 28 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. முன்னதாக காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் முன்னிலை வகித்த நிலையில் தற்போது பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் புதுடெல்லி தொகுதியில் பின்னடைவைச் சந்தித்து வந்த ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது முன்னிலை வகித்து வருகிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா பின்னடைவைச் சந்தித்துள்ளார். அதே போன்று காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் தீக்‌ஷித்தும் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளரும்,  முதல்வருமான அதிஷி பின்னடைவைச் சந்தித்துள்ளார். இங்குப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி முன்னிலை வகித்து வருகிறார். கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்  ஷிகா ராய் முன்னிலை வகித்து வருகிறார். அதே சமயம்  இங்கு ஆம் ஆத்மி வேட்பாளர் சவுரப் பரத்வாஜ் பின்னடைவைச் சந்தித்துள்ளார். இங்குப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கர்வித் சிங்வியும் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

ஜங்புரா தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளரும், முன்னாள் துணை  முதல்வருமான மணிஷ் சிசோடியா பின்னடைவைச் சந்தித்துள்ளார். பாபர்பூர் தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் கோபால் ராய் முன்னிலை வகித்து வருகிறார். மாளவியா நகர் தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் சோம்நாத் பாரதி பின்னடைவைச் சந்தித்துள்ளார். ஷகுர் பஸ்தி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் சத்யேந்தர் ஜெயின் பின்னடைவைச் சந்தித்துள்ளார். பிஜ்வாசன் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கைலாஷ் கெலோட்  முன்னிலை வகித்து வருகிறார். ரோகினி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் விஜேந்தர் குப்தா முன்னிலை வகித்து வருகிறார். ஓக்லா தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் அமனுத்தல்லா காண் பின்னடைவைச் சந்தித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்