Skip to main content

கன்னியாகுமாியில் கட்டப்பட்ட திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு கும்பாபிஷேகம்

Published on 27/01/2019 | Edited on 27/01/2019
t

 

கன்னியாகுமாியில் கட்டப்பட்ட திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

          கன்னியாகுமாியில் ராமகிருஷ்ணா மடத்துக்கு சொந்தமான விவேகானந்தா கேந்திராவில் கடற்கரையையொட்டி ஐந்தரை ஏக்கா்  நிலத்தில் 22 கோடி ருபாய் மதிப்பில் திருப்பதி வெங்கடாசலபதி கிளை கோவில் கட்டப்பட்டது. 

 

t

           

அந்த கோவில் கும்பாபிஷேகம்  மற்றும் திறப்பு விழா இன்று நடந்தது. இதற்கான யாகசாலை  பூஜைகள் கடந்த 5 நாட்களாக திருப்பதி கோவில் தலைமை அா்ச்சகா் சேஷாத்திாி தலைமை நடந்து வந்தது. நேற்று முன் தினம் மாலை மூலஸ்தான கருவறையில் 7 1/2 அடி  வெங்கடாசலபதி சிலையும், கோவிலில் 3 அடி உயர பத்மாவதி தாயாா் சிலையும், 3 அடி உயர ஆண்டாள் சிலையும், 3 அடி உயர கருட பகவான் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.   

 

t

           

 இந்த நிலையில் இன்று காலை 7.30 மணி முதல் 9 மணி வரை கும்பாபிஷேகம் நடந்தது. இதில் தமிழகம் மற்றும் ஆந்திராவை சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதையொட்டி ஏராளமான போலிசாா் பாதுகாப்புகாக குவிக்கப்பட்டியிருந்தனா். 

 

சார்ந்த செய்திகள்