கேரளாவில் பெய்த மழை வெள்ளத்தில் இருந்து படிபடியாக மக்கள் மீண்டு இயல்பு நிலைக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தான் தமிழகத்தில் உள்ள மாட்டு வியாபாரிகள் வழக்கம் போல் மாட்டு இறைச்சிகாக மாடுகளை கேரளாவுக்கு கொண்டு சென்று கோட்டையம் பக்கத்தில் உள்ள குண்டக்காய் மாட்டு சந்தையில் மாடுகளை விற்பதற்காக தழிழகத்திலிருந்து கேரளாவுக்கு கடத்தி வருகிறார்கள்.
இந்த விஷயம் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் காதுக்கு எட்டியதின் பேரில் உடனே எஸ்.பி. பாஸ்கரனை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். அதன்அடிபடியில் தான் மதுரையில் இருந்து கேரளாவுக்கு இரண்டு லாரிகளில் 50 க்கு மேற்பட்ட மாடுகளை மூச்சுவிட முடியாத அளவுக்கு ஏற்றிக்கொண்டு ஆண்டிபட்டி அருகே உள்ள க.விளக்கு அருகே வரும் போது திடீரென காக்கிகள் கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட மாட்டு லாரிகளை மடக்கி பிடித்து கேரளாவுக்கு இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட மாடுகளையும் பறிமுதல் செய்தனர். அதை தொடந்து இறைச்சிக்காக கேரளாவுக்கு மாடுகள் கொண்டு போகாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகம் உஷார் படுத்தப்பட்டு இருக்கிறது.