ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 40 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இப்படி ஒரு கொடூர தாக்குதலை கண்டு இந்திய நாடு பெரும் சோகத்தில் மூழ்கி உள்ளது. அது போல் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கும் நகரம் முதல் கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளிலும் இருக்கக்கூடிய பொதுமக்கள் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அங்கங்கே அமைதி ஊர்வலமும். அஞ்சலி செலுத்தியும் வருகிறார்கள். அதுபோல் திண்டுக்கல்லில் கல்லறை தோட்டம் அருகே வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலியில் பள்ளி மாணவ மாணவி முதல் பெரியவர்கள் வரை வந்து மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அந்த வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அதுபோல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவில் ஒரு வீட்டில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் படங்களை வைத்தது. அந்த வீட்டிலுள்ள ஒன்றரை வயது சிறுவனான என்.காவியன் மற்றும் என்.யாழினியும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி மலர் வைத்து வணங்கினார்கள். அதுபோல் திண்டுக்கல் மாநகரில் உள்ள பல வீடுகளில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் படங்களை வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியும் வருகிறார்கள். அந்த அளவுக்கு நமது இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்து நம்மை விட்டுப் போனாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மக்கள் மனதில் நின்று வருகிறார்கள்.