Published on 02/08/2019 | Edited on 02/08/2019
வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் ஆகஸ்ட் 1 ந்தேதி, அனுமதியின்றி தனியார் தோல்காலணி தொழிற்சாலையில் கூட்டம் நடத்தியதாகவும், அதேபோல் இஸ்லாமிய மூத்தநிர்வாகிகளுடன் தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தியதாகவும் அந்த திருமண மண்டபத்திற்கு நேற்றைய தினம் சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் திமுக தலைவர் ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த், பரீதாபாபு, வி.எம். ஜக்ரியா, உட்பட 4 பேர் மீது 171 f, 171 சி ,188 ipc உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.