Skip to main content

போலி பாஸ்போர்ட்டில் மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த பஞ்சாப் பெண்கள் கைது! 

Published on 11/03/2019 | Edited on 11/03/2019

 

திருச்சி விமான நிலையத்தில் தொடர்ச்சியாக பல்வேறு முறைகேடாக தங்கம் கடத்தல் நடந்து கொண்டே இருப்பதால் எப்போதும் கண்காணிப்புக்கு உள்ளான விமானநிலையமாக மாறிவருகிறது. இந்த நிலையில் போலி பாஸ்போர்ட் மூலம் வருகை புரிவது அதிகமாகி வருவது தான் தற்போது கவலைக்குரிய விசயமாக மாறிவருகிறது. 

 

t

 

மலேசியாவில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்த பஞ்சாப்பை சேர்ந்த 2 பேர் சிக்கினர். மலேசியாவிலிருந்து ஏர் ஏசியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் ஆவணங்களை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தை சேர்ந்த ஹர்பகவான் 24 வயதானவரின் பாஸ்போர்ட்டை சோதனையிட்டபோது அவர் 2008ல் மலேசியா சென்று வந்தது தொடர்பாக போலி முத்திரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதே விமானத்தில் வந்த அதே மாநிலத்தை சேர்ந்த குர்ஜித்சிங் மனைவி சிந்து விபீந்தர் கவுர் போலி பாஸ்போர்ட்டில் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் விசாரித்த போது அவர் தகவல்களை மாறி மாறி சொன்னதால் இந்த இருவரையும் ஏர்போர்ட் போலீசார் கைது செய்தனர்.

 

திருச்சியிலிருந்து மலேசியாவுக்கு கடந்த 5ம் தேதி இரவு ஏர் ஏசியா விமானம் புறப்பட இருந்தது. இதில் செல்ல இருந்த பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி காமாட்சியம்மன் கோயில் தெரு மேலத்தெருவை சேர்ந்த பட்டுலிங்கம் மகன் குமரவேல் பாஸ்போர்ட்டை சோதனையிட்டதில் அப்துல் பாதுஷா என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவரும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய ஏர்போர்ட் போலீசார் சிறையில் அடைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்