கன்னியாகுமாி மாவட்டம் புலியூா்குறிச்சி சந்தைவழியை சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம் (74) ஓய்வு பெற்ற விமானத்துறை அதிகாாி. இவரது மனைவி ராணி மணி(70). இவா்களுடைய மகன்கள் சதீஷ் கத்தாாில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறாா். கிஷோா் டெல்லியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறாா். இந்த நிலையில் இவா்களுடைய பெற்றோருக்கு திருமணம் நடந்து 50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி அவா்களுக்கு விழா எடுக்க முடிவு செய்து இரண்டு மகன்களும் குடும்பத்தினருடன் 5 நாட்களுக்கு முன் ஊருக்கு வந்தனா்.
மேலும் நாளை காலை விழா நடைபெற இருப்பதால் உறவினா்களும் ஒவ்வொருத்தராக வரத் தொடங்கினாா்கள். சதீசும், கிஷோரும் விழாவுக்கான ஏற்படுகளை செய்து கொண்டிருந்தனா். வீடும் திருமணம் வீடு போன்று அலங்காிக்கப்பட்டது. இந்த நிலையில் வீட்டின் அருகே இரட்டை தெருவில் உள்ள தெப்பக்குளத்தில் இன்று மாலை சதீஷ் மற்றும் அவருடைய மகன் அனீஷ்(19), உறவுக்கார பையன் அபிஷேக்(19) ஆகிய மூன்று பேரும் குளிக்க சென்றனா்.
அனீசும், அபிஷேகும் குளத்தில் நீந்தி குளித்து கொண்டிருந்த போது இருவரும் தண்ணீாில் மூழ்க தொடங்கினாா்கள். இதை பாா்த்த சதீஷ் அவா்களை காப்பாற்ற முயன்றாா் அவரால் முடியவில்லை... குளத்தில் குளித்து கொண்டிருந்தவா்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். அனிஷையும், அபிஷேகயையும் வாயில் நுரை தள்ளியப்படி மீட்டு நாகா்கோவிலில் தனியாா் மருத்துவமனையில் சிகிட்சைக்காக கொண்டு சோ்த்துள்ளனா். சதீஷை காப்பாற்ற முடியாததால் அவர் பாிதாபமாக உயிாிழந்தாா். இதனால் 50 ஆவது திருமணம் நாள் கொண்டாட இருந்த வீடு சோகத்தில் மூழ்கியுள்ளது.