Skip to main content

’நான் சென்னையில மூனு கடை போட்டிருந்தேன்; எல்லா பட்டாசும் வித்துடுச்சு’- அமைச்சரின் பேச்சால் சிவகாசி மக்கள் அதிர்ச்சி

Published on 04/12/2018 | Edited on 04/12/2018
k

 

விருதுநகர் மாவட்டம் மல்லி ராமகிருஷ்ணாபுரத்தில் நடைபெற்ற கால்நடை மருத்துவமனை திறப்பு விழாவில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டார்.  

இதன் பின்னர் செய்தியாளர்களிடம்  பேசிய அமைச்சரிடம்,   ’’பட்டாசு விற்பனைக்கு உச்சநீதிமன்றம் விதித்த நிபந்தனைகளால் பட்டாசு தொழிற்சாலைகள் காலவரையின்றி வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறித்தும், உச்சநீதிமன்ற உத்தரவினால் தீபாவளிக்கு பட்டாசு விற்பனை பாதிக்கப்பட்டது குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விக்கு,

 


 ’’நான் கடந்த 15 வருடங்களாக சென்னையில் பட்டாசு கடைகள் போட்டு வருகிறேன்.  இந்த தீபாவளிக்கும்  மூன்று பட்டாசுக்கடை சென்னையில் போட்டிருந்தேன்.   எல்லா பட்டாசும் வித்துடுச்சு. பட்டாசு விற்பனைக்கு ஒரு பாதிப்பும் இல்லை’’என்று கூறினார்.

 

பட்டாசு ஆலைகள் எல்லாம் மூடப்பட்டுள்ள நிலையில், அமைச்சரின் இந்த பதில் ராக்கெட் வேகத்தில் சென்று,  சிவகாசி மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்