Skip to main content

மின் இணைப்பை துண்டிக்க உத்தரவு...

Published on 15/11/2018 | Edited on 15/11/2018
powercut

 

 

கஜா புயல் இன்றிரவு 11.30 மணியளவில், நாகை, பாம்பன் பகுதிகளில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. மேலும் புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்றடிக்கும் எனவும், சிலநேரம் 100 கி.மீ. வேகம் வரை கூட செல்லும் எனவும் தெரிவித்துள்ளது.

 

அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் கரையைக்கடக்கும் இடங்களில் மின் இணைப்பை துண்டிக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கரையைக் கடக்கும் நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அழுகிய நிலையில் இரு சடலம் மீட்பு; இ.பி மீது பொதுமக்கள் கொந்தளிப்பு

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
Two farmers passed away in Tenkasi electrocution

தென்காசி மாவட்டத்தின் புளியங்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளான சண்முகவேல் மற்றும் குருசாமி இருவரும் சகோதர வழி உறவினர்கள். இருவருக்கும் கிராமத்தின் வெளியே தனித்தனியாக ஒன்று மற்றும் ஒன்றரை ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன. அதில் கடந்த 5ம் தேதியன்று தான் செய்த விவசாய மகசூலைப் பார்க்கச் சென்றிருக்கிறார் சண்முகவேல். வயலை சுற்றிப்பார்த்து வந்த சண்முகவேல் எதிர்பாராத வகையில் வயலில் அறுந்த கிடந்த ஹெவி மின் வயரைக் கவனிக்காமல் மிதித்திருக்கிறார். இதில் ஹெவி வோல்டேஜ் மின்சாரம் தாக்கிய சண்முகவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகி இருக்கிறார்.

சண்முகவேல் வீட்டுக்கு வராததை அறிந்த அவரது உறவினர்கள் குருசாமியிடம் கேட்டுள்ளனர். இதனையடுத்து கடந்த 6ம் தேதியன்று மதியம் வயல் பகுதிக்கு சென்ற குருசாமி, அங்கே சண்முகவேலைத் தேடியிருக்கிறார். அவர் குப்புறக் கிடந்ததைக் கண்டு பதறியவர் அவரைத் தட்டி எழுப்ப முயற்சித்துள்ளார் குருசாமி. இதில் பக்கத்தில் கிடந்த ஹெவி மின்வயர் பட்டதால் மின்சாரம் தாக்கி அவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகி இருக்கிறார்.

Two farmers passed away in Tenkasi electrocution

இந்த நிலையில் நேற்று முன்தினம் பக்கத்து வயல்காரரான குமார் தன் வயலுக்குச் சென்றபோது அங்கே அடுத்தடுத்து மின்சாரம் தாக்கப்பட்டு சண்முகவேலும், குருசாமி இருவரும் உயிரிழந்துகிடப்பது தெரியவரவே உடனே புளியங்குடி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்திருக்கிறார். அதையடுத்து சம்பவ இடம் விரைந்த இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் எஸ்.ஐ.சஞ்சய்காந்தி உள்ளிட்ட போலீசார் அழுகிய நிலையில் கிடந்த இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து புளியங்குடி போலீசார் விசாரணை நடத்த, ஊருக்குள்ளோ இந்த சம்பவம் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி ஊர்மக்கள் திரண்டிருக்கிறார்கள். ‘வயல்வெளி பகுதிகளில் செல்லும் அதீக அழுத்த மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் மறுநொடியே அது தொடர்பான டிரான்ஸ்ஃபார்மரின் அந்த வழி மின் இணைப்பிற்கான ஃபியூஸ் தானாகவே கட்டாகி மின்இணைப்பு துண்டித்து விடுகிற வகையில் தானே செட் செய்வது வழக்கம். அப்படியிருக்க இந்த மின்வயர் அறுந்த உடனே ஏன் மின் இணைப்பு கட்ஆகல. முறைப்படி செய்யப்பட்டிருந்தா விலை மதிப்புள்ள இரண்டு விவசாயிகளின் உயிர் பலியாகி இருக்குமா. இதுக்கு இ.பி. பதில் சொல்லணும்.

உயிரிழந்தவர்களில் சண்முகவேலுக்கு மனைவியும் 2 பெண்பிள்ளைகளும், குருசாமிக்கு மனைவியும் 3 பெண் பிள்ளைகளும் இருக்கின்றனர். இவர்களுக்கு போதிய நிவாராண உதவியோட ரெண்டு குடும்பத்தினருக்கும் அரசு வேலை வழங்கவேண்டும். அப்போதுதான் உடலை வாங்குவோம்’ என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இதையடுத்து, மின்வாரியத் துறை பலியான இரண்டு குடும்பங்களுக்கும் தலா மூன்று லட்சம் என 6 லட்சம் இழப்பீடு அளித்திருக்கிறது. அதிகாரிகளின் உறுதியளித்ததைத் தொடர்ந்து உடல்களை வாங்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.

Next Story

“புயல் பாதிப்பின்போது எதிர்க்கட்சி தலைவர் சேலத்தில் இருந்தார்” - அமைச்சர் தங்கம் தென்னரசு

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
TN Govt is a pioneer in dealing with the storm disaster says Minister Thangam Thennarasu

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட மழை பாதித்த இடங்களில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, பல இடங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்லத் திரும்பி வருகின்றனர். 

இந்த நிலையில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிவாரணத் தொகை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கால்நடை பாதிப்பு, நெற்பயிர் பாதிப்பு, வீடுகள் பாதிப்பு எனப் பாதிப்புகளுக்கு ஏற்றார்போல் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தக்கம் தென்னரசு, “புயல் பேரிடரை எதிர்கொண்டதில் தமிழக அரசு முன்னோடியாக உள்ளது. வெள்ள மீட்புப் பணிக்கு முதல்வரே நேரில் சென்ற நிலையில், எதிர்க்கட்சிகள் உள்நோக்கத்துடன் விமர்சனம் செய்கிறது. அமைச்சர்கள் தொடர்ந்து மழை, மீட்புப் பணியில் களப்பணியாற்றி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா படத்துடன் நிவாரணம் வழங்கிய நிலையில், தற்போது அப்படி செய்யாமல் எந்த படமும் இன்றி உடனுக்குடன் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. புயல் பாதிப்பு ஏற்பட்டபோது எதிர்க்கட்சி தலைவர் சேலத்தில் இருந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு புயலின் போது அதிமுக அரசு ரூ. 5000 வழங்கியது; திமுக அரசோ ரூ. 6000 வழங்குகிறது. நிவாரண தொகைக்கான டோக்கன் வரும் 16 ஆம் தேதி முதல் வழங்கப்படும். நாளை வரும் மத்தியக் குழுவிடம் நிதி உதவி குறித்து கோரிக்கை வைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.