Skip to main content

தூங்கிக் கொண்டிருந்த 8 மாத பெண் குழந்தையை கழுத்து அறுத்து வீசிய கொடூரம்!

Published on 01/07/2018 | Edited on 01/07/2018
baby


திருவள்ளூர் அருகே வீட்டில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 8 மாத பெண் குழந்தையை கழுத்து அறுத்து கொல்ல முயற்சி செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூரை அடுத்த பாண்டூர் கிராமத்தைச் சேரந்தவர் ராபின்சன் (26). ஆட்டோ டிரைவரான இவரது மனைவி லிடியா (20). இவர்களுக்கு இனியா (3) என்ற ஒரு மகளும், குஷி என்ற 8 மாத பச்சிளங் பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ராபின்சன் வீட்டிற்கு வராத நிலையில், ராபின்சனின் தாய் தந்தை மற்றும் தம்பி, அவரது மனைவி மற்றும் குழந்தைகள் என வீட்டில் குடும்பத்துடன் அனைவரும் தூங்கியுள்ளனர்.

 

 

இதையடுத்து, நள்ளிரவு 3.30 மணியளவில் எழுந்த லிடியா அருகில் தூங்கி கொண்டிருந்த குழந்தை இல்லாததால் அதிர்ச்சி அடைந்ததார். பின்னர் வீட்டில் உள்ளவர்களை எழுப்பி வெளியே சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருடன் துடித்துக்கொண்டிருப்பதைக் கண்டு மேலும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

உடனடியாக குழந்தையை மீட்டு திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு 8 தையல் போடப்பட்டு அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து லிடியா தன் குழந்தையை கடத்திச் சென்று கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார்.

லிடியாவின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்த போலீசார் வீட்டின் உள்ளே புகுந்து குழந்தையை கடத்தியது யார்? எதற்காக கழுத்தை அறுத்து வீசி சென்றனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

News Hub