Skip to main content

'எனக்கு பில்லி சூனியம் வைத்துள்ளார்கள்' - டி.ஐ.ஜி அலுவலகம் முன்பு தீக்குளித்த வாலிபர் உயிரிழப்பு!!

Published on 16/11/2020 | Edited on 16/11/2020

 

INCIDENT IN VILUPPURAM

 

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, நீதித்துறை, போக்குவரத்துத் துறை, அறநிலையத் துறை உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன.

 

இங்கு விழுப்புரம் சரக டி.ஐ.ஜி அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகம் முன்பு கடந்த 11ஆம் தேதி காலை 10.30 மணியளவில் சிதம்பரம் தாலுக்கா மேலமணக்குடியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் 35 வயது திருலோகச்சந்தர், அலுவலக வாயிலில் நின்றபடி கேரளாவைச் சேர்ந்த நரபலி சாமியார் ஒருவர் தன்னைக் கொலை செய்வதற்காக, பில்லி சூனியம் வைத்து உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியபடியே தன் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்துள்ளார்.

அங்கிருந்த காவலர்கள் தடுத்துக் காப்பாற்றி அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த திருலோகச்சந்தரை, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி திருலோகச்சந்தர் நேற்று முன்தினம் மாலை இறந்துள்ளார். இதையடுத்து விழுப்புரம் தாலுக்கா காவல்நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்