![incident in madurai](http://image.nakkheeran.in/cdn/farfuture/rKCbRXSwsrOtyaKPBR4Vh28QKV9C6kAq8qU2SS_QqRQ/1593358309/sites/default/files/inline-images/cbcbcbb.jpg)
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தினமும் ஆயிரக்கணக்கில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கரோனா உறுதி செய்யப்படுவோர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இன்றுவரை தமிழகத்தில் 82ஆயிரத்தைக் கடந்திருந்தது கரோனா பாதிப்பு.
இந்நிலையில் மதுரையில் கரோனா உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்படும் முகாமில் வைக்கப்பட்டிருந்த முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த முதியவர் இரண்டாவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். முகாமில் உரிய சிகிச்சை, உணவு வழங்கப்படவில்லை எனக்கூறி முதியவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. தற்பொழுது மாடியில் இருந்து குதித்ததில் படுகாயம் அடைந்த முதியவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.