Skip to main content

சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றம்

Published on 26/01/2025 | Edited on 26/01/2025
temple

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழா நாட்களில் காலை 7:00 மணிக்கு கீழே வீதி கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றுவது வழக்கம். இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு 76 ஆவது குடியரசு தின விழா ஜனவரி 26 ஆம் தேதி கீழவீதி கோபுரத்தில் தேசியக் கொடியை நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளர் வெங்கடேசன் தீட்சிதர் ஏற்றி அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார். இதில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தீட்சிதர்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்