Skip to main content

"உலகத்தை ஆளக்கூடிய சக்தி தமிழ்மொழிக்கு உண்டு" -  அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு! 

Published on 27/01/2025 | Edited on 27/01/2025
Minister I. Periyasamy's says Tamil language should be the official language in India

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம், திண்டுக்கல் - பழனி சாலையில் கிரீன்பார்க் ஓட்டல் அருகில் நடைபெற்றது. கூட்டத்துக்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். திண்டுக்கல் தெற்கு ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அஸ்வின்பிரபாகரன் ஆகியோர் வரவேற்றனர். திமுக துணை பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான இ.பெரியசாமி அவர்களும், மாநில இலக்கிய அணி துணை செயலாளர் கோவை திராவிடமணி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.  

இக்கூட்டத்தில்  அமைச்சர் இ.பெரியசாமி பேசியதாவது... உலகில் உள்ள மொழிகளில் இலக்கணம், இலக்கியம் உள்ள ஒரே மொழி தமிழ் மொழி தான். உலகத்தையே ஆளக்கூடிய சக்தி தமிழ் மொழிக்கு உள்ளது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மட்டுமே வழங்குகிறது. மீதமுள்ள தொகையான ரூ.1 லட்சத்து 74ஆயிரத்தை தமிழக அரசு வழங்குகிறது. தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பற்று இருந்தவர்களில் 20 லட்சம்பேருக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்பட்டுள்ளது. மத்தியில் உள்ள மதவாத ஆட்சிக்கு முடிவு கட்டும் விதமாகவே இனி நமது போராட்டம் இருக்க வேண்டும். இந்தியாவில் தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும். உலகத்தை ஆளக்கூடிய சக்தி தமிழ்மொழிக்கு உண்டு.அதற்கு நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தண்டபாணி, ஆத்தூர் நடராஜன், தமிழ்மணி, கனகதுரை, மாவட்ட அவைத்தலைவர் காமாட்சி, மாவட்ட துணைச் செயலாளர்கள் நாகராஜன், பிலால் உசேன், மார்கிரேட் மேரி, மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, மாநகர செயலாளர் ராஜப்பா, மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கே.எஸ்.அக்பர், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் துரைப்பாண்டி, பாஸ்கரன், பள்ளபட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் பரமன், ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளர் ப.க.சிவகுருசாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் மணி, ஆத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராமன், கொடைக்கானல் கீழ்மலை செயலாளர் வி.எம்.எ.கருமலைப்பாண்டி, பேரூர் கழக செயலாளர்கள் கன்னிவாடி இளங்கோவன், ஸ்ரீராமபுரம் ராஜா, சின்னாளபட்டி ஆ.மோகன்ராஜ், நிலக்கோட்டை ஜோசப் கோவில்பிள்ளை,

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன், மருத்துவர் அணி அமைப்பாளர் அமிர்தகடேஸ்வரர், பொறியாளர் அணி எம்.செந்தில்குமரன், விளையாட்டு மேம்பாட்டு அணி பார்த்தசாரதி, விவசாய அணி இல.கண்ணன், மாநகர பகுதி செயலாளர்கள் ராஜேந்திரகுமார், பஜ்ருல்ஹக், கொடைக்கானல் நகர செயலாளர் முகமது இப்ராகிம், திண்டுக்கல் மாநகர பொருளாளர் சரவணன், மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் பொன்.முருகன், கலை இலக்கிய பகுத்தறிவு அமைப்பாளர் அய்யம்பாளையம் அய்யப்பன்,  நெசவாளர் அணி ஜெயராஜ், பேரூராட்சி மன்றத்தலைவர்கள் ஸ்ரீராமபுரம் சகிலாராஜா, கன்னிவாடி தனலெட்சுமிசண்முகம், சின்னாளபட்டி இரா.பிரதீபாகனகராஜ்,  சித்தையன்கோட்டை போதும்பொண்ணு முரளி, அம்மையநாயக்கனூர் எஸ்.பி.செல்வராஜ், அய்யம்பாளையம் ரேகாஐய்யப்பன், சேவுகம்பட்டி வனிதாதங்கராஜன், அகரம் நந்தகோபால், மாமன்ற உறுப்பினர்கள் நெல்லைசுபாஷ், ஆனந்தன், ஜானகிராமன், மற்றும் கழக சார்புஅணி, இளைஞரணியினர், தொண்டரணியினர் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சூசைராபர்ட் நன்றி கூறினார்.

சார்ந்த செய்திகள்