

திமுக தலைவர் கலைஞர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக திங்கள்கிழமை மாலை மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிட்டது. இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனையில் குவிந்தனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் மற்றும் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் வந்தனர்.
அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு உள்ளே சென்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். பின்னர் வெளியே வந்த அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது சுதீஷ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளிநாடு சென்றுள்ளார். அங்கிருந்து தொடர்பு கொண்ட அவர், கலைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனை சென்றுவர சொன்னார். அதன்படி மருத்துவமனைக்கு வந்தோம். இங்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்தோம். மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவர்கள் கவனித்து வருகிறார்கள் என தெரிவித்தார். கலைஞர் விரைவில் நலம் பெற்று வரவேண்டும் என்று இறைவனை பிராத்திக்கிறோம் என்றார்.