
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி தமிழகத்தின் நீலகிரி, கோவை, திருப்பத்தூர், தேனி, ஈரோடு, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய எட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளை அதிகபட்ச வெப்பநிலை 35 லிருந்து 36 டிகிரி செல்சியஸ் வரை ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 24ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 25, 26 இல் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்பு இருக்கும். மார்ச் 27, 28, 29 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.