கள்ளக்குறிச்சியில் ஹெல்மெட் அணியாமல் கச்சிராயபாளையத்தில் இருந்து செந்தில் மற்றும் அவரது பாட்டி அய்யமாள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை வழிமறிக்க லத்தியை சுழற்றனர். அதை கவனித்த செந்தில் குனிந்து கொள்ள பின்னால் அமர்ந்து இருந்த அய்யம்மாள் மீது பட்டு நிலைதடுமாறி விழந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்நிலையில் அந்த இடத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த ஒரு சப்-இன்ஸ்பெக்டர் ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் மூன்று தலைமை காவலர்கள் ஏற்கனவே ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட போலீஸ் சூப்பரின்டன்ட் ஜெயக்குமார் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரித்த மாவட்ட போலீஸ் சூப்பரின்டன்ட் ஜெயக்குமார் அவர்கள் அளித்த பரிந்துரையின் பேரில் டிஐஜி சந்தோஷ் குமார் அவர்கள் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் தொடர்புடைய பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணி, தலைமை காவலர்கள் சந்தோஷ் இளையராஜா மற்றும் செல்வம் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.