![The first Chief Minister to visit the Wellington Military Training Center in 50 years!](http://image.nakkheeran.in/cdn/farfuture/gcR_bqMKCcyg7oL-zjhy3SkX_f9Zaa1vtnnoDmX2Ar4/1653064526/sites/default/files/inline-images/mksa3232111.jpg)
நீலகிரி மாவட்டம், வெலிங்டனில் உள்ள போர் நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதைச் செலுத்தினார்.
உதகைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 124- வது மலர் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். பின்னர், வெலிங்டனில் உள்ள போர் நினைவிடத்திற்கு சென்ற முதலமைச்சரை ராணுவ உயரதிகாரிகள் வரவேற்றனர். லெப்டினன்ட் ஜெனரல் மோகன் இயக்கிய காரில் சென்று ராணுவ பயிற்சி மையத்தைப் பார்வையிட்டார். இதையடுத்து, போர்களில் வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவுத் தூணில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதைச் செலுத்தினார்.
![The first Chief Minister to visit the Wellington Military Training Center in 50 years!](http://image.nakkheeran.in/cdn/farfuture/e-vPLBzEdo7aGMzZ6_aY65kyEy9ZuR-saf3POsJGa0E/1653064534/sites/default/files/inline-images/mks434343.jpg)
அதைத் தொடர்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்ட முதலமைச்சர், ராணுவ அதிகாரிகளோடு கலந்துரையாடினார்.
கடந்த 50 ஆண்டுகளில் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்திற்கு சென்ற முதல் முதலமைச்சர் என்ற பெருமையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுள்ளார்.