மரணத்தை மனித குலத்திற்கு கொடுத்து வருகிற கரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் பல மாநிலங்களில் தொடர்ந்து வியாபித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மூன்று மாவட்டங்கள் தனிமைப்பட்ட மாவட்டமாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள எல்லைகள் அனைத்தும் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள எல்லைகளான நாமக்கல், சேலம், கரூர் மற்றும் கர்நாடகா மாநில எல்லை என அனைத்து எல்லோயோரப் பகுதிகளும் அடைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் ஈரோடு ரயில் நிலையத்தை இன்று பகல் அதிகாரிகள் முழுமையாக அடைந்து விட்டனர். ரயில் நிலையம் முழுக்க கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு ரயில் நிலையத்திற்கு ஒரு நாளுக்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் வந்து செல்வது வழக்கம். அதேபோல் ஜவுளி நகரமான ஈரோட்டிற்கு ஏராளமான பொருட்கள் ரயில் மூலம் பார்சல் அனுப்பப்படும். இந்த நிலையில் ஈரோடு தனிமைப்பட்ட மாவட்டமாக அறிவிக்கப்பட்ட ஈரோடு ரயில் நிலையத்தை முழுமையாக தடுப்பு வைத்து அடைத்து விட்டனர் அதிகாரிகள்.