Skip to main content

நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார்; பிரேதப் பரிசோதனைக்காக காத்திருப்பு

Published on 07/07/2019 | Edited on 07/07/2019

 

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் வடகாடு வடக்குப்பட்டி பகுதியில் ஆழ்குழாய் பாசனத்தில் பூ செடிகள் மற்றும் பல்வேறு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒரு விவசாயி தனது தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வரும் பூ செடிகளை நாய்கள் விளையாடும் போது ஒடிந்துவிடுவதாக தின்பண்டங்களில் விஷம் கலந்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திண்பண்டங்களை தின்ற அதே பகுதியை சேர்ந்த அழகப்பன், சத்தியசீலன் மற்றும் சிலர் வளர்த்து வந்த  4 க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்துள்ளது. இதில் அழகப்பளின் நாய் மட்டும் அவரது வீட்டிற்கு அருகில் வந்து இறந்துகிடந்தது.

 

d


    அழகப்பனின் வளர்ப்பு நாய் இறந்து கிடந்ததைப் பார்த்து அப்பகுதியில் தேடிய போது ஒரு தோட்டத்தில் பல இடங்களில் திண்பண்டங்களில் விஷம் வைத்திருந்தது தெரிய வந்தது. அதனால் அழகப்பன் ஒரு விவசாயி பெயரைக் குறிப்பிட்டு நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வடகாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு அப்பகுதி கால்நடை டாக்டர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளார். போலிசார் அழைத்தால் இறந்த நாயை பிரேதப் பரிசோதனை செய்ய வருவதாக கால்நடை டாக்டர் தகவல் கொடுத்ததால் மாலை வரை இறந்த நாய் இறந்த இடத்திலேயே கிடந்தது.     இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்