
திருவாரூர் மாவட்டம் விளக்குடி கிருஷ்ணசாமி என்பவர் தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை நீட் தேர்வு எழுத கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு அழைத்து சென்று மகனை தேர்வு மையத்துக்கு அனுப்பிவிட்டு விடுதியில் காத்திருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
கிருஷ்ணசாமியின் இறப்பிற்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டுமென வலியுறுத்தி கண்டனம் தெரிவித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் திருத்துறைப்பூண்டி - மன்னார்குடி சாலையில் விளக்குடியில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடந்தது.

சிபிஎம் முன்னால் மாவட்ட செயலாளர் ஐவி.நாகராஜன், தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் மாவட்ட கவுரவ தலைவர் எம்.செல்வராஜ், திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் வி.பாலமுருகன் முன்னிலை வகித்தார். சுமார் 1 மணி நேரம் மறியல் நடந்தது. அதிகாரிகள் பேச்சுவார்த்தையடுத்து போராட்டம் தற்காலிகமாக விளக்கி கொள்ளப்பட்டது.