உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில ஆளுநரான சதாசிவம் அவர்களுக்கு சென்னை அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் சார்பில் நாளை கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. இந்த விழாவில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு கேரள கவர்னர் சதாசிவத்துக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மாநில அமைச்சர்கள் இந்த விழாவில் பங்கேற்க உள்ளன. தமிழகத்தை சேர்ந்த சதாசிவம் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றவர் ஆவர். பின்னர் வழக்கறிஞராக பயிற்சி பெற்றார். அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மதியம்(12/07/2019) சென்னை வந்த குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் அமைச்சர்கள், காவல்துறை உயரதிகாரிகள் வரவேற்றன. அதன் பின் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் காஞ்சிபுரம் சென்று வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதர் சுவாமியை தரிசனம் செய்தார்.