திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா விசலூரில் உள்ள பிரசித்தி பெற்ற மஹாகாளியம்மன் கோவிலில் உள்ளது. இந்த கோயிலுக்கு அப்பகுதி மக்கள் ஏராளமானோர் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த கோயிலுக்கு ஊர் மக்கள் யாராவது ஒருவர் பாதுகாப்பிற்காக இரவு நேரத்தில் இருப்பது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு தினங்களாக கோயிலில் யாரும் இரவு நேரத்தில் பாதுகாப்பிற்கு இல்லை.
இந்நிலையில் இன்று காலை 6 மணி அளவில் கோவில் பொறுப்பாளர் சுப்பிரமணியன் கோயிலுக்கு வந்த போது கோயிலின் கேட்டு மற்றும் கதவுகளின் பூட்டுகளை அறுத்து உடைந்து இருப்பதையும் கண்டு அதிர்ந்து போய் உள்ளே சென்று பார்த்த போது 45 கிலோ எடையுள்ள ஐம்பொன் அம்மன் சிலை மர்ம நபர்களால் திருடப்பட்டிருந்தது. இதனையடுத்து சுப்பிரமணியன் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் நன்னிலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து திருட்டுநடைபெற்ற இடத்தை ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர். இந்ததிருட்டு சம்பவத்தில் சிலை மட்டுமின்றி வெண்கல குத்துவிளக்கு மற்றும் பூஜை பொருட்களையும் திருடப்பட்டுள்ளது. கோயிலுக்கு காவலர்கள் இல்லை என்பதை அறிந்த அப்பகுதி நபர்களே திருடியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.