Published on 07/02/2020 | Edited on 07/02/2020
தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இது தொடர்பாக சென்னை மற்றும் கரூரில் உள்ள செந்தில்பாலாஜின் வீட்டில் சோதனை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார், சென்னையில் உள்ள அவர் வீட்டை சீல் வைக்கவும் செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. மேலும் தேவைப்படும் போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு அறிவுறுத்தியுள்ளது.