கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் இந்திய அளவில் தமிழகம் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடித்து வருகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,989 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 42,687ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இதுவரை தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 397 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நாளை காலை 11 மணிக்கு மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இதைத்தொடர்ந்து பகல் 12 மணிக்கு, தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், பொதுமுடக்கம், பள்ளி கல்லூரிகள், வழிப்பாட்டு தலங்கள் திறக்கப்பது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.