Skip to main content

ஊழியருக்கு கரோனா... மூடப்பட்ட அம்மா உணவகங்கள்!- பசியால் வாடும் ஆதரவற்றோர்

Published on 04/07/2020 | Edited on 05/07/2020
 Corona to employee ... Closed amma restaurant

 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில் இரண்டு அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. நகராட்சியால் நிர்வகிக்கப்படும் இந்த அம்மா உணவகத்தை பெண்கள் குழுவினர் நடத்தி வருகின்றனர். இங்கு தினமும் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உணவு வாங்கி உண்கின்றனர்.

இந்த உணவகத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது, ஜூன் 4ந்தேதி உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆரணி நகரில் உள்ள அம்மா உணவகம் இரண்டும் அவசரமாக இன்று மூடப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் அனைவருக்கும் நாளை கரோனா பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக 3 நாளைக்கு அம்மா உணவகங்கள் திறக்கப்படாது என கூறப்படுகிறது.

ஆரணி நகரில் நூற்றுக்கணக்கான வயதானர்கள், ஆதரவற்றவர்கள் சாலை ஓரங்களில் வசிக்கின்றனர், வறுமையில் வசிப்பவர்களும் இருக்கின்றனர். அவர்களின் பசியை போக்கும் உணவகமாக அம்மா உணவகங்கள் இருந்தன. தற்போது அவை மூடப்பட்டு இருப்பதால் இவர்களெல்லாம் பசியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்