Skip to main content

பேருந்துகளில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் அரசு பள்ளி மாணவர்கள்!

Published on 21/09/2022 | Edited on 21/09/2022

 

hkj


கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்திற்கு, கிராமப்புற பகுதிகளில் இருந்து நாள்தோறும் பள்ளி செல்லும் மாணவர்கள், தினக்கூலிக்கு வேலைக்கு செல்பவர்கள், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்பவர்கள் என அனைத்து தரப்பினரும் அரசு பேருந்துகளை நம்பியே பயணம் செய்து வருகின்றனர். 

 

இந்நிலையில் சேத்தியாதோப்பில் இருந்து அகர ஆலம்பாடி வழியாக விருத்தாச்சலம் நோக்கி வருகின்ற தடம் 31 A என்ற எண் கொண்ட  அரசு பேருந்தில் அரசு பள்ளி மாணவர்கள் உயிரை பணயம் வைத்து பல கிலோ மீட்டர் தூரம் வரை படிக்கட்டில் தொங்கியபடியே ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் அச்சத்துடனே இருந்து வருகின்றனர். மேலும் அரசு பேருந்துகளில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றுவதால் அரசு பேருந்து ஒரு பக்கம் சாய்ந்தவாறே செல்வது கான்போரை பதற செய்கிறது.

 

கிராமப்புறங்களில் இருந்து வரக்கூடிய மாணவர்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லாத காரணத்தினாலும்,  பள்ளிக்கு நேரத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதினாலும், இதுபோல் உயிரை பணையம் வைத்து படிக்கட்டில் தொங்கி செல்வதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் கிராமப்புறங்களுக்கு கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் பெற்றோர் தரப்பில் கோரிக்கை வைக்கின்றனர்.


 

சார்ந்த செய்திகள்