Published on 06/05/2022 | Edited on 06/05/2022

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "தமிழக சட்டப்பேரவையில் தாங்கள் கொண்டு வந்த தனித் தீர்மானத்தின் படி, இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று தாங்கள் அறிவித்துள்ளமை தங்களது நல்லெண்ணத்தைக் குறித்து நிற்கின்றது.
இலங்கைப் பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டுப் பிரச்சனையாகப் பார்க்காது மனிதாபிமான அடிப்படையில், நோக்கும் தங்களிற்கு, தமிழ்நாடு மாநில அரசிற்கும் இலங்கை மக்கள் சார்பாக மிகுந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.