Skip to main content

கிருஷ்னசாமி குடும்பத்திற்கு கமல் செல்போனில்  ஆறுதல்

Published on 07/05/2018 | Edited on 07/05/2018
kl

 

நீட் தேர்வு எழுத தனது மகன் கஸ்தூரி  மகாலிங்கத்தை  கேரளாவுக்கு அழைத்துச் சென்ற திருவாரூர் மாவட்டம் விளக்குடி கிராமத்தைச் சேர்ந்த  நூலகரான கிருஷ்ணசாமி மாரடைப்பால் மரணமடைந்த தகவல் கூட தெரியாமல் தேர்வு எழுதிவிட்டு வந்தவருக்கு தன் தந்தை இறந்த தகவல் அறிந்து கதறி அழுதுள்ளார் சதுரங்கம் சாம்பியன் கஸ்தூரி மகாலிங்கம்.
  அவரது குடும்பத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரிலும் போனிலும் ஆறுதல் சொல்லி வருகின்றனர். 


இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் கஸ்தூரி மகாலிங்கம் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொன்ன போது தொலைபேசியில் தொடர்பு கொண்ட மக்கள் நீதி மய்யம் கமல் தொலைபேசியிலேயே கிருஷ்ணசாமி குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார். அப்போது பேசமுடியாமல் உறவினர்கள் கதறி அழுதனர்.
   

சார்ந்த செய்திகள்

Next Story

மநீம நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Manima Executive Committee, Date Notification for Executive Committee Meeting

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் வரும் 23.01.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 11:30 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. எனவே அனைத்து நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

கணவனின் தொடர் தொல்லை; காலை வெட்டிய மனைவி கைது

Published on 01/09/2023 | Edited on 01/09/2023

 

Continued action by the husband; Arrested wife who decided in anger

 

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தினமும் மது அருந்திவிட்டு கணவன் தகராறு செய்ததால், மனைவி கணவனின் காலை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தாக்குதலில் ஈடுபட்ட மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டத்திற்கு உட்பட்டது எருமாடு கிராமம். இந்த கிராமத்தின் பள்ளியரா எனும் பகுதியைச் சேர்ந்தவர்கள் குமரன் - சாரதா தம்பதியினர். இவர்களுக்கு சுஜாதா, சுனிதா, பிரியா, சிவானந்தம் என்ற நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவர் குமரன் தினந்தோறும் மது குடித்துவிட்டு மனைவி சாரதாவிடம் தகராற்றில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

 

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மது குடித்துவிட்டு மனைவியிடம் குமரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாரதா, வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து கணவனின் காலை வெட்டியுள்ளார். அடுத்த நாள் அதிகாலை பார்த்த பொழுது கணவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார். கால் பகுதியில் நரம்பு துண்டிக்கப்பட்டதால் உடலில் இருந்த ரத்தம் அனைத்தும் வெளியேறி அவர் உயிரிழந்தது தெரியவந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்த நிலையில். சம்பவ இடத்திற்கு வந்த தேவாலா காவல்துறையினர் உயிரிழந்த குமரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, உயிரிழப்புக்கு காரணமான மனைவி சாரதாவை கைது செய்தனர்.