இது பெரியார் மண், இங்கு ரதத்தை காட்டி எல்லாம் ஏமாற்ற முடியாது. யாரை நிராகரிக்க வேண்டும் என்பது மக்களுக்கு தெரியும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
ரத யாத்திரைக்கும் பாஜக, ஆர்.எஸ்.எஸ், விஷ்வ ஹிந்து பரிஷித்திற்கும் சம்பந்தமில்லை. மற்ற மாநிலங்களில் ரதயாத்திரை அனுமதிக்கப்பட்டது குறித்து யாரும் கேள்வி கேட்கவில்லை. ரத யாத்திரைக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலங்களில் கூட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனுமதிக்கபடும் போது மட்டும் ஏன் கேள்வி எழுப்பிகின்றனர். அவர்கள் அமைதியாக யாத்திரை செல்லும் போது நாம் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி மறுப்பது தவறான ஒரு செயல். கைது நடவடிக்கை முன்னெச்சரிக்கைக்காக எடுக்கப்பட்டது.
இது பெரியார் மண், குழந்தைக்கு எதையாவது காட்டி ஏமாற்றுவது போல் ரதத்தை காட்டி எல்லாம் இங்கு ஏமாற்ற முடியாது. யாரை ஆதரிக்க வேண்டும்? யாரை நிராகரிக்க வேண்டும் என்பது மக்களுக்கு தெரியும். அமைதியாக இருக்கும் மாநிலத்தில் வீணாக குழப்பத்தை ஏற்படுத்தி அதன்மூலம் ஆதாயம் தேடும் நிகழ்ச்சிதான் தற்போது நடக்கிறது என அவர் கூறியுள்ளார்.