Skip to main content

சுனாமி: 15வது ஆண்டு நினைவு அஞ்சலி

Published on 26/12/2019 | Edited on 26/12/2019


15வது ஆண்டு சுனாமி நினைவுதினத்தை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று கடலில் மலர்தூவியும், பால்  ஊற்றியும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  

 

s

 

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி அன்று இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சுனாமி பேரலை உருவாகி கடற்கரையோரகளில் தாக்கியது.  இந்த தாக்குதலில் இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, இலங்கை, கிழக்கு ஆப்பிரிக்கா, மாலத்தீவு, மியான்மர் உள்ளிட்ட11 நாடுகளைச்சேர்ந்த 2 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர்.  தமிழகத்தில் நாகப்பட்டினம், கடலூர், கன்னியாகுமரி, சென்னை  பகுதிகளில் கடற்கரையோரம் அதிகம் பாதிப்பு ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

 

சுனாமியின் கோரத்தாண்டவத்திற்கு உயிரிழந்தவர்களை நினைவுக்கூரும் விதமாக ஒவ்வொரு டிசம்பர் 26 அன்றும் கடலில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் உறவினர்களும், பொதுமக்களும். இன்றைய தினம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலில் மலர்தூவி, பால் ஊற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  

 

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி புதுவை கடலில் மலர்தூவி, பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார்.
 

சார்ந்த செய்திகள்