Skip to main content

“நான் முதல்வன் திட்டம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Chief Minister M.K. Stalin's Pride

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற குடிமைப் பணிகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC - யு.பி.எஸ்.சி.) சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வானது, முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகளைக் கொண்டது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் மொத்தமாக 1016 நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுப்பிரிவில் 347 மாணவர்களும், இதர பிற்படுத்தப்பட்டவர் (OBC) பிரிவில் 303 மாணவர்களும் இ.டபிள்யூ.எஸ். 115 மாணவர்களும், எஸ்.சி. 165, எஸ்.டி. 86 மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் ஆதித்யா ஸ்ரீ வஸ்தா என்பவர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த தேர்வில் அகில இந்திய அளவில் 78 ஆவது இடமும், தமிழ்நாட்டில் இரண்டாமிடமும் பிடித்து, சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மருத்துவ மாணவர் பிரசாந்த் சாதனை படைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுவையில், “மத்திய அரசின் குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற நான் முதல்வன் திட்டம் உதவியாக இருந்தது” எனத் தெரிவித்திருந்தார். 

Chief Minister M.K. Stalin's Pride

இதனை மேற்கோள்காட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “நான் முதல்வன் திட்டம்: என் கனவுத்திட்டம் மட்டுமல்ல; நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம். நேற்று வெளியான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முடிவுகளே அதற்கு சாட்சி” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்