Skip to main content

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு குறைப்பு

Published on 03/09/2023 | Edited on 03/09/2023

 

nn

 

தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழகத்திற்கு நீர் வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர்.

 

அதேநேரம் கர்நாடகாவில் நீர் திறப்புக்கு எதிராக முன்னாள் முதல்வர்கள் பொம்மை, குமாரசாமி ஆகியோர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு 7,435 கன அடியாக குறைந்துள்ளது. கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து நீர் திறப்பு 8,212 கனஅடிகளிலிருந்து 7,435 கன அடியாக குறைந்துள்ளது. கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 1,000 கன அடியாக உள்ளது. இதன் காரணமாக தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து பத்தாயிரம் கன அடியில் இருந்து 9 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

 

கடந்த இரண்டு நாட்களாக நீர்வரத்து இருந்ததால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை வித்து இருந்த நிலையில் இந்த தடை உத்தரவு இன்றும் அமலில் இருக்கிறது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 5,018  கனடியில் இருந்து 6,430 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 48.48 அடியில் இருந்து 48.24 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 16.72 டிஎம்சியாக உள்ளது. வினாடிக்கு எட்டாயிரம் கன அடி நீர் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்