Skip to main content

”எந்தக் கடிதமும் எங்களுக்கு வரவில்லை” - கைவிரித்த எடப்பாடி தரப்பு 

Published on 20/06/2022 | Edited on 20/06/2022

 

Edappadi side says We have not received any letter

 

வரும் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூடவுள்ள நிலையில், அதிமுக வட்டாரத்தில் ஒற்றைத்தலைமை கோரிக்கை வலுத்து வருகிறது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வரும் நிலையில், பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

இந்த நிலையில், எடப்பாடி ஆதரவு தரப்பினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அந்தச் சந்திப்பில் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, “வரும் 23ஆம் தேதி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் எழுச்சியோடு திட்டமிட்டபடி பொதுக்குழு உறுதியாக நடைபெறும். இந்த நிமிடம்வரை எங்களுக்கு எந்தக் கடிதமும் வரவில்லை. அதனுடைய சாரம்சம் என்னவென்று எனக்குத் தெரியாது. எங்களுக்குத் தெரியாதது பற்றி விளக்கமளிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்