Skip to main content

மீண்டும் பரபரப்பாகும் சென்னை பேருந்து நிலையங்கள் படங்கள்…

Published on 31/08/2020 | Edited on 31/08/2020

 

 

நேற்று அறிவித்த நான்காம் கட்ட தளர்வுகளில் முக்கியமானது பேருந்து இயக்கம். பொது முடக்கம் காரணமாக பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் பேருந்துகளும் பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. மேலும் காய்கறி சந்தைகளில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கவேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி அதற்கு ஏதுவாக காலியாக இருந்த பேருந்து நிலையங்களை தற்காலிக காய்கறி மார்கெட்டாக பயன்படுத்தி வந்தது.

 

இதில் சென்னை பிராட்வே பேருந்து நிலையமும் அடக்கம். இந்நிலையில் நாளை முதல் மாநகர பேருந்துகள் இயக்கப்படவுள்ளதால் சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த காய்கறி மார்க்கெட் அகற்றப்பட்டு சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கும்  பணி நடைபெற்றது.

 

 

சார்ந்த செய்திகள்