Skip to main content

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

Published on 10/09/2022 | Edited on 10/09/2022

 

Indefinite strike by fishermen in Rameswaram

 

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

 

கடந்த சில தினங்களாகதமிழக  தமிழக மீனவர்களின் படகில் இருந்தது பொருட்களை கொள்ளை அடித்து செல்வதும், படகில் இருப்பவர்களை தாக்குவதும்,  மீனவர்களை கைது செய்யப்படுவது மிகவும் அதிகரித்து வருகிறது. 

 

இந்நிலையில் இலங்கை சிறையில் உள்ளவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரத்தில் தமிழக மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுவரை பிடிக்கப்பட்ட விசைப்படகுகளுக்கும் மீனவர்களுக்கும் அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது. எனினும் இன்னும் நிவாரணம் சென்றடையாமல் சில மீனவர்கள் இருப்பதால் அவர்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

டீசல் விலை தற்போது அதிகரித்துள்ளதால் தமிழக அரசு வழங்கும் 1500 லிட்டர் மானிய டீசலை 3000 லிட்டராக உயர்த்தி வழங்க வேண்டும் என  பல்வேறு வகையான தீர்மானங்களையும் நிவர்த்தி செய்ய வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பலகோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

சில தினங்கள் முன் இலங்கையின்  நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றிய போது "இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பது அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார். இந்திய மீனவர்கள் அவ்வாறு மீன்பிடிப்பது சட்டவிரோத குற்றம் எனவும் அவ்வாறு மீன் பிடிப்பது தொடர்ந்தால் 2018ன் சட்டப்படி ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டு வைத்திருக்கும் விசைப்படகுகள் இலங்கை மீனவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்