![11 policemen transferred with cage - action in Vellore](http://image.nakkheeran.in/cdn/farfuture/KJ-Z3wUK-W-kbLID2t6QgZ-Vmmtu6JfSx7rSDgfP7Yo/1675951366/sites/default/files/inline-images/n223292.jpg)
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி காவல் நிலையத்தில் ரவுடிகள் மீது சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், கொலை வழக்கில் துப்பு துலக்கவில்லை எனவும் லத்தேரி காவல் நிலையத்தில் பணியாற்றும் இரண்டு உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஒன்பது காவலர்கள் என 11 காவல்துறையினரை மொத்தமாக இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
உதவி ஆய்வாளர்கள் ரங்கநாதன், பாஸ்கரன், காவலர்கள் வினோத், சந்திரசேகரன், தட்சிணாமூர்த்தி, தீர்த்தகிரி, சந்தோஷ், லோகேஸ்வரன், சந்திரசேகரன், ராஜசேகரன், புகழேந்தி ஆகியோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். கள ஆய்வில் முதலமைச்சர் என்கிற திட்டத்தை முதலமைச்சர் வேலூரில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மாற்றப்பட்டனர். இந்நிலையில், வேலூர் லத்தேரி காவல் நிலைய போலீசார் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.
கொலைவழக்கு ஒன்றில் சரியாக நடவடிக்கை எடுக்காதது குறித்து முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் சென்றதால் மாற்றப்பட்டார்கள் எனப் பரபரப்பாகப் பேசப்படுகிறது.