கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செஞ்சிலுவை சங்கத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக இரு சக்கர வாகன தொடர் பேரணி மற்றும் காணொளி ஊர்தியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிதம்பரம் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.
பேரணி நகரத்தின் முக்கிய வீதி வழியாக சென்று பஸ் நிலையம் வந்தடைந்தது. இதில் சார் ஆட்சியர் விசு மஹாஜன் செஞ்சிலுவைச் சங்கத்தின் சேவைகள் அடங்கிய கையேட்டினை வெளியிட்டார். அதனை சங்கத்தின் கடலூர் மாவட்ட தலைவர் பிரையோன் பெற்றுக் கொண்டார். சங்கத்தின் செயலாளர் பாலசுப்பிரமணியன், சிதம்பரம் கிளை தலைவர் சேதுமாதவன் செயலாளர் நடராஜன், பொருளாலர் கமல் கோத்தாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உறுப்பினர்கள் இளங்கோ, கனகசபை, சீனுவாசன், ராஜசேகர், சோனாபாபு, மகபூப் உசேன். சக்திவேல், ஜுனியர் ரெட் கிராஸ் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் சிதம்பரம் பகுதியில் உள்ள பள்ளிகளின் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதனைதொடர்ந்து பொதுமக்களுக்கு செஞ்சிலுவை சங்கத்தின் சேவைகளை காணொளி காட்சி மூலம் விளக்கி காண்பிக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் நின்று பார்த்து சென்றனர்.