Skip to main content

ஊரடங்கு விதியை மீறி ஊர் சுற்றியவர்களிடம் ரூபாய் 22.01 கோடி அபராதம் வசூல்!

Published on 30/08/2020 | Edited on 30/08/2020

 

tamilnadu coronavirus lockdown police peoples

தமிழகத்தில் ஊரடங்கு விதியை மீறி ஊர் சுற்றியவர்களிடம் ரூபாய் 22.01 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறிய 6.94 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

அதேபோல் ஊரடங்கு தடையை மீறி வாகனங்களில் சுற்றிய 9.99 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 9.02 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
 

சார்ந்த செய்திகள்