![car that came at high speed; Tragedy happened to the women sitting on the side of the road](http://image.nakkheeran.in/cdn/farfuture/_UxrAF77yXrUKU6Nl0ibpla9PugzHM_l19XFdQrDZ1g/1732702889/sites/default/files/inline-images/chengal-car-art.jpg)
கார் மோதியதில் சாலையோரம் அமர்ந்து மாடு மேய்த்துக் கொண்டிருந்த 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பண்டிதமேடு என்ற பகுதியில் 5 பெண்கள் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சாலையோரம் அமர்ந்திருந்தாக கூறப்படுகிறது. அச்சமயத்தில் அவ்வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று இவர்கள் 5 பேர் மீதும் பலமாக மோதியதாக கூறப்படுகிறது. இதில் 5 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே காரை ஒட்டி வந்த நபரை பிடித்து சரமாரியாகத் தாக்கினர். மேலும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண்கள் பண்டிதமேடு பகுதியைச் சேர்ந்த லோகாம்பாள், விஜயா, யசோதா, ஆனந்தம்மாள் மற்றும் கௌரி எனத் தெரியவந்துள்ளது. அதோடு உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.