Published on 23/05/2021 | Edited on 23/05/2021
![Black fungal infection detected in Pudukkottai!](http://image.nakkheeran.in/cdn/farfuture/rMtBycJljLN6wnnmD-X70vpG8BEj9_w7yw3xHbwNNxU/1621775789/sites/default/files/inline-images/PUDUK1.jpg)
தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 35,873 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் ஒரே நாளில் 5,559 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 448 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 20,046 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 55 வயதான நபருக்கு கருப்பு பூஞ்சை நோய் உறுதியானதை அடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.