காவல் சரக எல்லை குறித்த வரம்புகளின்றி உதவி கோரி வரும் அழைப்புகள் மீது தகுந்த நடவடிக்கை எடுங்கள் தமிழக டிஜிபி ஜே.கே.திரிபாதி தமிழில் ஜ.கு.திரிபாதி என கையெழுத்திட்டு தமிழில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
ஐதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரத்தை சுட்டிக்காட்டி டிஜிபி அறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் பெண், மூத்த குடிமக்கள், சிறார், மாற்றுத்திறனாளிகளுக்கு காவலன் செயலி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள், தங்களுக்கு கீழ் பணிபுரியும் அனைத்து போலீசாருக்கும் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காவலன் கைபேசி செயலியை ஊக்குவிக்க மேற்கொண்ட நடவடிக்கை, ஏற்பட்ட பயன்களை ஜனவரி 10- ஆம் தேதிக்குள் மாநகர காவல் ஆணையர்கள், எஸ்.பிக்கள். டிஐஜிக்கள், ஐஜிக்கள் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் திரிபாதி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.