மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் திட்டக்குழுவில் தொடங்கி சிபிஐ வரை பல்வேறு அமைப்புகளை தொடர்ச்சியாக மாற்றி அமைத்து வருகிறது. இந்த நிலையில் அரசின் செயல்பாடுகள் குறித்து நேரடியாக விமர்சனங்களை வைத்தால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையில் பாஜக அரசு இல்லை என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான்.
பாஜக அரசுக்கு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவிற்கும் மோதல் ஏற்பட்டதாக செய்திகள் சில தினங்களாக வெளியாகி வருகிறது. இந்த நிலையில் இதற்கு காரணம் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் துணை கவர்னர் விரல் ஆச்சார்யா பேச்சு என்பதாக சொல்லப்படுகிறது. அவர் தனது பேச்சில் " மத்திய அரசின் நெருக்கடிக்கும் உட்பட்டு செயல்பட்டு வருகிறோம். ஆர்.பி.ஐ-யின் சுதந்திரத்தையும் ,சுயாட்சியையும் மத்திய அரசு மதிக்கவில்லை என்ற பேச்சின் மூலம் வெளிப்பட்டு இருக்கிறது. இந்த சுயாட்சி அமைப்பை சீர்குலைத்தால் பெரிய பிரச்சனை ஏற்படும் என்று பேசி இருக்கிறார். துணை கவர்னரின் இந்த பேச்சுக்கு காரணம் ,ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் பிரிவு 7-ஐ கொண்டுவர அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய அரசு செய்து இருக்கிறது.
பணமதிப்பிழப்பு, ஜி எஸ் டி , பொதுத்துறை நிறுவனங்களில் வரலாற்றில் இல்லாத வாராக்கடன் என்று மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாட்டில் பொருளாதாரம் மிகவும் சீர்குலைந்து கிடக்கிறது. இந்த நிலையில் குஜராத்தை சேர்ந்த உர்ஜித் பட்டேலை ஆர்.பி.ஐ கவர்னராக கொண்டு வந்தால் தங்களுக்கு ஆதரவாக செயல்படுவார் என்று பாஜக அரசு நினைத்தது. ஆனால் தேர்தல் வரும் சமயத்தில் பொருளாதார ரீதியாக தங்களுக்கு ஏற்றார் போல கொள்கைகளை மாற்றி அமைக்க முயற்சிகளை மேற்கொள்ள முயற்சித்தது. ஆனால் உர்ஜித் பட்டேல் அனுமதிக்காததால் இந்த மோதல் முற்றியிருக்கிறது. அதே நிலையில் ஆர் பி ஐ கவர்னர் உர்ஜித் படேல் பதவியை ராஜினாமா செய்யப்போகிறார் என்று காலை ஆங்கில தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.
அதன் பின்னர் மத்திய நிலைமைச்சகம் சார்பில் அறிக்கை வெளியானது " நாட்டு மக்களின் நலன் கருது சிலவற்றை மாற்றி அமைக்க ஆலோசனை செய்யப்பட்டது. ஆர் பி ஐ சுயாட்சியாக முடிவுகள் எடுப்பதில் மத்திய அரசு தலையிடாது என்று சொல்லப்பட்டு இருக்கிறது" . ஆனால் பிரிவு 7 ஐ அமல்படுத்துவது குறித்து எந்த ஒரு விவரமும் அந்த அறிக்கையில் இடம் பெறவில்லை. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் ,திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து இருக்கிறார்கள்.