Published on 27/12/2022 | Edited on 27/12/2022
![bharathiyar granddaughter passed away](http://image.nakkheeran.in/cdn/farfuture/r6_J6Nmp-rj_8BAcpIEukO-Lu9sDxkR0LoJikNXAC1E/1672142091/sites/default/files/inline-images/art-image-bhathi-grand-daug.jpg)
பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி நேற்று சென்னையில் காலமானார்.
சுதந்திரப் போராட்ட வீரர், கவிஞர், பத்திரிகையாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் மகாகவி பாரதியார். இவரின் மூத்த மகளான தங்கம்மாள் மகள் லலிதா பாரதி ஆவார். இவருக்கு வயது 94. மிகச் சிறந்த கவிஞரான இவர் 40 ஆண்டுகள் இசை ஆசிரியராகப் பணியாற்றியவர். மேலும் தனது தாத்தாவான பாரதியாரின் பாடல்களை இசை வடிவில் பரப்பும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக லலிதா பாரதி நேற்று காலமானார். இவரது மரணம் தமிழ் ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.