Published on 19/12/2018 | Edited on 19/12/2018

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சாலையில் இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ, சாலையை ஆக்கிரமித்தோ பேனர்கள் வைக்க தமிழ்நாடு முழுக்க தடைவிதித்து உத்தரவிட்டுள்ளனர். முன்னதாக நீதிபதிகள் அத்துமீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை நீக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், வேலையை விட்டுவிட்டு தங்களுக்கு விருப்பமான கட்சிகளில் போய் இணையுங்கள் என்று குறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.