Published on 26/01/2022 | Edited on 26/01/2022

தமிழகத்தில் 13 புதிய பேருந்து நிலையங்களுக்கு அனுமதியளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 424 கோடி ரூபாய் மதிப்பில் 13 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஈரோடு, கடலூர், கரூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருமங்கலம், திண்டிவனத்தில் இந்த புதிய பேருந்து நிலையங்கள் அமைய இருக்கின்றன. அதேபோல் மன்னார்குடி, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாமக்கல், சங்கரன்கோவில் ஆகிய ஊர்களிலும் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட இருக்கிறது. தமிழக அரசு, தமிழ்நாடு உட்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி உதவியுடன் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.