சினிமாவில் நகைச்சுவை நடிகர் வடிவேலு பேசுவதைப் போல தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசுவதாக தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினரும், தி.மு.க.வின் அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று (29/03/2022) செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி எம்.பி., "70 ஆண்டுகாலம் பாரம்பரியமிக்க எங்கள் கட்சியினுடைய தலைவராக இருக்கக்கூடிய முதலமைச்சரைப் பற்றி அவதூறாக பேசிய காரணத்தினால், நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நான் நோட்டீஸ் அனுப்பினேன். இது கூட புரிந்துக்கொள்ள முடியவில்லை என்றால், எப்படி அவர் காவல்துறை அதிகாரியாக இருந்தார் என்பது எனக்கு தெரியவில்லை.
இன்றைக்கு சொல்கிறார், முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள்; கமலாலயத்தில் ஆறு மணி நேரம் நான் உட்காரப் போகிறேன். இது எப்படி என்றால், சினிமாவில் வடிவேல் நான் ஜெயலுக்கு போறேன், ஜெயிலுக்கு போறேன் என்று வண்டியில் ஏறின மாறி, அண்ணாமலை கமலாலயத்தில் போய் உட்கார்ந்துக் கொண்டு என்ன கைது பண்ணுங்க, கைது பண்ணுங்கனா, ஒரு காவல்துறை அதிகாரி, எப்படி ஐ.பி.எஸ். கொடுத்தாங்கனு தெரியவில்லை. ஒரு புகார் கொடுத்தால் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை.
அண்ணாமலை ஜெயிலுக்கு போக வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். அப்படி, அவர் முடிவு பண்ணிருக்காரு என்றால், உரிய நேரம் வரும், சூழ்நிலை ஏற்படுகிற போது, நிச்சயமாக கன்வெக்ஷன் ஆகி உள்ளே போவார்" என்றார்.